உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கையில் தற்போது சாலைப்பணி நடந்து வருகிறது. அந்த வழித்தடத்தில் இயங்கிய பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுப்பாதையில் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நல்லிருக்கை பா.ஜ., நிர்வாகி முத்துக்குமார் கூறியதாவது; ராமநாதபுரத்தில் இருந்து அரசு டவுன் பஸ் வழித்தடம் எண் 24,உத்தரகோசமங்கை வழியாக நல்லிருக்கை உள்ளிட்ட7 கிராமங்களை கடந்து 8 முறை வரும். தற்போது பயணிகளை உத்தரகோசமங்கையில் இறக்கி விடுகின்றனர். தற்போது நடக்கும் சாலைப்பணியால் இன்னும் 10 நாட்களுக்கு அரசு டவுன்பஸ் வரத்து இருக்காது என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு மாற்றுச்சாலையாக உத்தரகோசமங்கையில் இருந்து கோனேரி வழியாக நல்லிருக்கைக்கு பஸ்கள் இயக்கினால் மக்கள் பயனடைவர். போக்குவரத்து கழக நிர்வாகம் மக்கள் நலன் கருதி மாற்றுப்பாதையில் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.