ராமநாதபுரம்: ராமநாதபுரம் அம்மா உணவகம் அருகே பாதாள சாக்கடை கழிவுநீர் பல நாட்களாக தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகம் செயல்படுகிறது.தினமும் தொழிலாளர்கள், பயணிகள் உணவருந்த வருகின்றனர். உணவகம் அருகே பாதாளசாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு நிரம்பி சாக்கடை நீர் பல நாட்களாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.தினமும் உணவருந்த வரும் மக்கள் துர்நாற்றத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.