கடலாடி: கடலாடி யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழுத்தலைவர்முத்துலட்சுமி தலைமை வகித்தார்.துணைத்தலைவர் ஆத்தி முன்னிலை வகித்தார்.ஒன்றியக்கவுன்சிலர் முனியசாமி பாண்டியன் வரவேற்றார்.கமிஷனர் பா.அன்புக்கண்ணன்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்சிவனுபூவன் உட்பட ஒன்றியக்கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தி.மு.க., ஒன்றியக்கவுன்சிலர்கள்8 பேரும் தங்களது பகுதிகளில்பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யமுடியவில்லை என்றும்,உரிய நிதியை ஒதுக்காமல் புறக்கணிக்கின்றனர்எனக்கூறி வெளிநடப்பில் ஈடுபட்டனர்.அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.