முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் 10 நாட்களாக அவ்வப்போது மழை பெய்ததால் கரிமூட்ட தொழில் பாதித்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.முதுகுளத்துாரில் விவசாயத்தில் பலவருடங்களாக நஷ்டத்தை சந்தித்து வந்ததால் மாற்றுத்தொழிலாக கரிமூட்ட தொழிலுக்கு மாறினர். 10 நாட்களாக மழைபெய்வதால் கடம்பன்குளம்,துாரி,கீழக்காஞ்சிரங்குளம்,காக்கூர்,ஆனைசேரி,இறைச்சிகுளம் உட்பட பல்வேறு கிராமங்களில் கரிமூட்டம் தொழில் பாதித்துள்ளது.கரிமூட்டதொழிலாளி முத்துராமலிங்கம் கூறியதாவது,முதுகுளத்துார் பகுதியில் விவசாயத்திற்கு பிறகு மாற்றுத்தொழிலாக கரிமூட்டம் தொழில் செய்து வருகிறோம்.தற்போது பணம் செலவு செய்து கருவேல் மரங்களை தொழிலாளர்கள் வைத்து விறகுகளை வெட்டி எடுத்து கரிமூட்டம் போடும் பணிகளை செய்தோம். தொடர்மழையால் கரிமூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் கரிகள் வீணாகும் நிலையுள்ளது,என்றார்.