பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் இரவில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவோரால்அப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.பெரியபட்டினம்அம்மன் கோயில் ஊரணி முன்புறமுள்ளமணற்பாங்கான பகுதியிலும்,தங்கையா நகரில் உள்ளமயானப்பகுதிகளிலும்,குண்டூரணியிலும் தொடர்ந்துமணல் திருட்டு நடந்து வருகிறது.ஊராட்சித்தலைவர்அக்பர் ஜான்பீவி கூறியதாவது;பெரியபட்டினம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளைதேர்வு செய்து எவ்வித அனுமதியும் இன்றி,டிராக்டர்களில் மணல் அள்ளப்படுகிறது. திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதே நிலை தொடர்ந்தால் நிலத்தடிநீர் வெகுவாக பாதிப்பை சந்திக்கும்.மணல் திருட்டை தடுக்க கனிமவளத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்றார்.