ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த மகளிர், மத்திய அரசின் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மகளிர் சக்தி என்ற தேசிய விருது பெறவிண்ணப்பிக்கலாம்.மகளிருக்காக தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய, பாதிக்கப்பட்டபெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக மகளிர் சக்திவிருது தனிப்பட்ட நபர்களுக்கு ரூ. 1 லட்சமும், நிறுவனங்களுக்கு ரூ. 2லட்சம் மற்றும்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்கள் www.narishaktipuraskar.wcd.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன.7, 2021 என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.-----