வடமதுரை: வடமதுரையில் வேகத்தடையை தவிர்க்க தடம் மாறும் பஸ்களால் நால் ரோடு சந்திப்பில் விபத்து அபாயம் ஏற்படுகிறது.இங்கு நான்கு வழிச்சாலை உருவான பிறகு போக்குவரத்து வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டது.இதன்படி வடமதுரையில் இருந்து திருச்சி ரோட்டில் செல்ல வேண்டிய வாகனங்கள், ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலையில் சென்று நான்கு வழிச்சாலையில் சேர வேண்டும்.திருச்சி ரோட்டில் இருந்து வடமதுரைக்குள் வரும் வாகனங்கள் மங்கம்மாள் கேணி வழியேசெல்லும் பழைய ரோட்டை பயன்படுத்த வேண்டும்.ஆனால் இந்த தடங்களில் இருவேறு இடங்களில் இருக்கும் வேகத்தடைகளால், விரைவு பஸ்கள்இந்த வழியை தவிர்த்துவிட்டு, நால்ரோடுசந்திப்புவழியே ஊருக்குள் வருகின்றன.இதனால் நால் ரோடு சந்திப்பில் அவசியமற்ற நெரிசலும் விபத்துஅபாயமும் ஏற்படுகிறது.