மதுரை:மதுரை, செக்கானுாரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா, 40. எரமலைப்பட்டியைச் சேர்ந்த நல்லதம்பி மற்றும் அவரது மகன் மீது, ஒரு தகராறு தொடர்பாக, 2017ல் கொலை மிரட்டல் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில், நல்லதம்பி மகன் பெயரை சேர்க்காமல், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய,
1 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டது.முடிவில், 80 ஆயிரம் ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டனர். முதல் கட்டமாக, நேற்று முன்தினம், 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அனிதாவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரை மதுரை லஞ்ச ஒழிப்பு தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.