திருநெல்வேலி:மகனை கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், ஆரைக்குளத்தைச் சேர்ந்தவர் குருநாதன், 76; மகன் கார்த்திகேயன், 30. திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.கார்த்திகேயன், 2014 ஜூலை, 29ல் குடிபோதையில் தந்தை குருநாதனை தாக்கினார். இதனால், ஆத்திரமுற்ற அவர், மகனை அரிவாளால் வெட்டினார்.
காயங்களுடன் சிகிச்சையில் இருந்தவர், ஆக., 1ல் இறந்தார். இவ்வழக்கை விசாரித்த, நெல்லை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரவிசங்கர், குருநாதனுக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பளித்தார்.