கமுதி:கமுதி அருகே குடும்ப பிரச்னையால் 4 மாத குழந்தையுடன் இளம்பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கமுதி அருகே மேலமுடிமன்னார் கோட்டையை சேர்ந்த பொன்முருகன் மனைவி குருதேவி 20,திருமணம் முடிந்து நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது.கணவர்,மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. குருதேவி,குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். போலீசிற்கு தெரிவிக்காமல் உடலை எரிக்க முயன்றனர்.
கமுதி போலீசார் இருவரின் உடலையும் மீட்டு கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலமுடிமன்னார் கோட்டை வி.ஏ.ஓ.,செந்துார்பாண்டி புகார் கொடுத்தார்.போலீசார் கணவர் உட்பட உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.