நிலக்கோட்டை:நிலக்கோட்டை டீகடையில் வாங்கிய போண்டாவில் பிளேடு இருந்ததால் எஸ்.ஐ., கனகராஜ் 52, அதிர்ச்சி அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அவர் எஸ்.ஐ.,யாக உள்ளார். நேற்று நிலக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதி டீகடைக்கு வந்தவர் போண்டா வாங்கிச் சென்றார். தனது பேத்திக்கு ஊட்டுவதற்காக போண்டாவை பிய்த்த போது, உள்ளே முழு பிளேடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உணவுப் பாதுகாப்பு துறையினரிடம் புகார் செய்தார்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதனை ஆய்வுக்கு அனுப்பினர். அங்கு பிளாஸ்டிக் பைகள் இருந்ததால் டீகடை உரிமையாளர் செல்வத்திற்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். வீட்டுக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டரை பறிமுதல் செய்தனர்.