பல்லடம்;பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில், மூட்டை மூட்டையாக கிடந்த மதுபாட்டிலால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பல்லடம், மங்கலம் ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இச்சூழலில், பள்ளி வளாகத்தில் தூய்மை பணி மேற்கொண்டபோது, மூட்டை மூட்டையாக மதுபாட்டில் கிடந்ததை பார்த்து, பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு பசுமையான சூழலை ஏற்படுத்தும் முயற்சியில், பள்ளி வளர்ச்சி குழு, மற்றும் அறம் அறக்கட்டளை உட்பட, தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இச்சூழலில், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து, பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், சீட்டாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.இது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, சமூக விரோத செயல்கள் பள்ளி வளாகத்தில் நடக்காமல் தடுக்க வேண்டும். இரவு நேரங்களில், பள்ளி வளாகத்துக்குள் நுைழயும் சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்யவும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.