பல்லடம்:வேலை தேடி வந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பனியன் கம்பெனிகள், தொழிற்சாலைகளில், வெளி மாநில, மாவட்ட தொழிலாளர்களே பெரும்பாலும் வேலை பார்க்கின்றனர்.அவ்வாறு, பல்லடத்தில் உள்ள ஆள்சேர்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் வேலை தேடி வந்த தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், புகாரில் இடம்பெற்ற, தனியார் நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.'வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வேலை தேடி தொழிலாளர்கள் சிலர் வந்துள்ளனர். எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டால், கிடைத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறி, சிலர் தொழிலாளர்களை அடித்து துன்புறுத்தி உள்ளனர். எனவே, நிறுவன உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது,' என, போலீசார் கூறினர்.