திருப்பூர்:திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்தவர் முருகன், 31; அதே பகுதியை சேர்ந்தவர் கவிதா, 22. கடந்த வாரம், கோவை அரசு மருத்துவமனையில், கவிதாவுக்கு, ஆண் குழந்தை பிறந்தது.குழந்தையுடன், வளர்க்க முடியாது என்பதால், 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றனர். இது குறித்து சைல்டு லைன் அலுவலர் மாதவன், காங்கயம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் கவிதா, குழந்தையை வாங்கிய தம்பதியினரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முருகன் நேற்று கைதானார்.