திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 14 ஆயிரத்து, 361 பேர், கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று, 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 15 ஆயிரத்து, 172 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 68 பேர் உட்பட, 14 ஆயிரத்து, 361 பேர், இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.தற்போது, 603 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 63 வயது முதியவர் இறந்தார். இதுவரை, 46 பெண்கள் உட்பட, 208 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.