பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கணவர் இறந்த இரண்டு மணி நேரத்தில், மனைவியும் இறந்ததால், குடும்பம் சோகத்தில் மூழ்கியது.
பொள்ளாச்சி, டி. நல்லிக்கவுவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம், 67; டெய்லர். கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு இறந்தார். அதிகாலை, 3:45 மணியளவில், மனைவி சரஸ்வதி, 63, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.கணவனும், மனைவியும், இணை பிரியாமல், ஒரே நாளில் இறந்ததால், ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. தம்பதியர் உடல்கள், கிராம மயானத்தில், அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.