பந்தலுார்:பந்தலுார் அருகே, உப்பட்டி பகுதியில் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.இப்பகுதியில் தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில், உப்பட்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று வங்கி; கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.'நோய்தொற்று பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்ளவும், வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரத்துறை மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.