கோத்தகிரி:கோத்தகிரியில் சிறுத்தை பூனை இறந்து கிடந்தது சம்பந்தமாக, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில், மக்கள் நடமாட்டம் உள்ள நடைபாதையில், நேற்று சிறுத்தை பூனை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து, பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இத் தகவலின் படி, ரேஞ்சர் செல்வகுமார் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன், சிறுத்தை பூனையை பிரேத பரிசோதனை செய்தபின், அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. விசாரணை நடந்து வருகிறது.