கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள அணுகுபாலத்தை ஒட்டி, மேற்கு பகுதியில் சர்வீஸ் ரோடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டது. ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் மஞ்சள் நிற கோடும் போடப்பட்டுள்ளது.இந்த ரோட்டினை ஒட்டி மேற்கு பகுதியில் அண்ணாநகர் குடியிருப்பு உள்ளது. இதில், ஐந்து குறுக்கு வீதிகள் உள்ளன. இந்த ரோடுகளுக்கு செல்வதற்கு, நுாறு மீட்டர் துாரத்திற்கு சாய்வுதள ரோடு அமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் தடுமாறி செல்ல வேண்டியுள்ளது.சாய்வுதள ரோடு அமைத்து, குடியிருப்பு பகுதி ரோடுகளை, சர்வீஸ் ரோட்டுடன் இணைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.