பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2020
02:06

வால்பாறை:வால்பாறை ஒன்றியத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.தமிழகத்தில் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க, ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆறு முதல், 18 வயதுடைய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு, இவர்களை பள்ளி சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால், மே மாதம் நடத்த வேண்டிய கணக்கெடுப்பு, கடந்த, 21ம் தேதி முதல், டிச., 10ம் தேதி வரை கணக்கெடுப்பு நடக்கிறது.வால்பாறை ஒன்றியத்தில், நகர் புற வள மைய பொறுப்பாளர் பிரதீபா தலைமையில் ஆசிரியர் பயிற்றுனகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், 'வால்பாறை ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 94 பள்ளிகளில், 120 குடியிருப்புக்கள் உள்ளன. கணக்கெடுப்பில் பள்ளி செல்லா குழந்தைகள், 38 பேரும், மாற்றுத்திறனாளி குழந்கைகள், 30 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் கல்வியாண்டில் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X