தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: மனது வைக்குமா மாவட்ட நிர்வாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2020
02:07

உடுமலை:பின்னலாடை சார்ந்த தொழில்கள் அதிகரித்து வரும் குடிமங்கலம் பகுதியில், திறன் மேம்பாட்டு பயிற்சியை, வழங்கினால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறும் வாய்ப்புள்ளது.உடுமலை தாலுகாவுக்குட்பட்ட குடிமங்கலம் பகுதியில், நுாற்பாலை சார்ந்த தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்கு, நுாற்பாலை தொழில் முக்கிய பங்கு வகித்து வந்தது.இதையொட்டி, அரசால், குடிமங்கலத்தில், தொழிற்பேட்டையும் அமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால், இப்பகுதியில், பெரிய, சிறிய நுாற்பாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்தனர்.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, திருப்பூரில், இருந்து பல்வேறு நிறுவனங்கள், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில், பின்னலாடை சார்ந்த, தொழிற்சாலைகளை துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.டையிங், நிட்டிங் தவிர்த்து, ஆயத்த ஆடை தயாரிப்புக்கான சிறு, குறு தொழிற்சாலைகள், அனைத்து பகுதிகளிலும் துவங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நுாற்பாலை சார்ந்த தொழில்களில், அதிக அனுபவம் பெற்ற, தொழிலாளர்கள், பின்னலாடை சார்ந்த பணிகளில், அனுபவம் இல்லாமல், திணறும் நிலை காணப்படுகிறது.வளர்ந்து வரும் தொழிலில், பணியாற்ற, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தயாராக இருந்தாலும், அனுபவமின்மை அவர்களது தயக்கத்தை கூடுதலாக்குகிறது. இந்நிலையில், திருப்பூரில், மத்திய, மாநில அரசின் பல்வேறு திட்டங்களின், கீழ், கல்லுாரிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.இப்பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு, திறன் அங்கீகார சான்றும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இத்தகைய சான்று பெற்ற தொழிலாளர்களுக்கு, பின்னலாடை நிறுவனங்களில், முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், குடிமங்கலம் ஒன்றிய பகுதியில், தொழிலாளர்களுக்கு, சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்த வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான கிராமப்புற தொழிலாளர்கள் பயன்பெறும் வாய்ப்புள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X