கிராமத்து ஸ்நாக்ஸ்... உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2020
02:12

இன்று ஆன்லைனில் ஆர்டர் செய்தால், வகை வகையான ஸ்நாக்ஸ் வீடு தேடி வலம் வருகின்றன. சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ்ன் முன்னோடி பொரி தான். பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, தனது வெண்மை நிறத்திலும், சுவையிலும் அனைவரையும் கட்டிப் போட்டுள்ளது.கடந்த நூற்றாண்டில் திருமண மண்டபம், விசேஷம் நடக்கும் இடங்கள் திருவிழாக்கள், பண்டிகைகள், சினிமா தியேட்டர் என அனைத்து இடங்களிலும் பொரியின் ஆதிக்கமே இருந்தது. இதன் சுவைக்கு அடிமையானவர் பலர் உண்டு. சரி இதை எப்படி தயாரிக்கிறாங்கனு பார்ப்போம்.அரிசியிலிருந்து தான் இதை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், இந்த அரிசி கர்நாடகாவிலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அரிசியை நீரில் ஊறவைத்து, சூரிய ஒளியில் உலரவைத்து, சிறு குவியல்களாக குவித்து வைக்கப்படுகிறது.பின் அதில் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் ஆகியவை தேவைக்கு தகுந்த அளவில் சேர்த்து, சில மணி நேர பக்குவம் செய்யப்படுகிறது. பின், பொரியாக மாற ரெடியான அரிசியை இயந்திரத்தில் கொட்டி, இரண்டு மணி நேரத்துக்கும் மேல் வேக வைக்கும் பொழுது சுவை மிகுந்த பொரி உற்பத்தியாகிறது.இதில் மூன்று வகை உள்ளது. அளவான உப்பு சேர்த்த சாதாரண பொரி, கூடுதல் உப்பு சேர்த்த உப்பு பொரி, உப்பு சேர்க்காத பொரி என வகைப்படுத்தப்படும். உப்பு, இனிப்பு சேர்க்காத பொரியை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் விரும்பி சுவைக்கலாம்.பலநுாறு ஆண்டுகளுக்கு முன்பே, முன்னோர்கள் இந்த கிராமத்து 'ஸ்நாக்ஸ்' உற்பத்தி செய்துள்ளனர். தற்போது பலவ கையான ஸ்நாக்ஸ் வரவுகளாலும், அதன் சுவைகளாலும் பொரியின் பயன்பாடு குறைந்துள்ளது.ஆனால், உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத முன்னோர்களின் பொரி எக்காலத்துக்கும் சிறந்த தின்பண்டமாக வலம் வருகிறது என்பதில் ஐயமில்லை.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X