உடுமலை:உடுமலை அருகே ஒரு குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் பகுதியில், 16 வயது சிறுமிக்கு நேற்றுமுன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு திருமணம் நடக்கவுள்ளதாக, குழந்தை பாதுகாப்பு அலகுக்கு தகவல் வந்தது.இதனால், அதன் நிர்வாகிகள் போலீசார் மற்றும் சமூக நலத் துறை உதவியுடன் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பு குடும்பத்தினருக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டது.