பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஜோதிலிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில் ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார். மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, வெள்ளிகிழமையான நேற்று கார்த்திகை மாத பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையில், மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. மாலை, 6:20 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பிரதோஷபூஜையில்கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில்களில் குறைந்தளவில் பக்தர்கள் பங்கேற்று, சமூக விலகல் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.