கோபால்பட்டி: கோபால்பட்டியில் கனரா வங்கியின் ஏ.டி.எம்., அறை கண்ணாடி உடைப்பு தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். நத்தம் ரோட்டில் காளியம்மன் கோயில் எதிரே இந்த ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை அவ்வழியாக நடைப்பயிற்சி சென்றவர்கள் ஏ.டி.எம்., அறையின் கதவு உள்ளிட்ட முன்பகுதி கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். உட்பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்திற்கு சேதம் ஏற்படாமல், உடைந்த கண்ணாடி துண்டுகள் மட்டும் சிதறிக்கிடந்தன. ஏ.டி.எம்.,மில் திருட முயற்சி நடந்ததா எனத்தெரியவில்லை. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.