மதுரை: மதுரை மாவட்ட நுாலக ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் யா.ஒத்தக்கடை கிளை நுாலகத்தில் மூன்றாம் நிலை நுாலகராக பணிபுரியும் சுப்பிரமணியனுக்கு 2020க்கான சிறந்த நுாலகருக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது (நல் நுாலகர் விருது) வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான 50 கிராம் எடையுள்ள வெள்ளிபதக்கம், ரூ.5000 ரொக்கப்பரிசை வழங்கி கலெக்டர் அன்பழகன் பாராட்டினார். மாவட்ட நுாலக அலுவலர் யசோதா உடனிருந்தனர்.