மதுரை: மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் அருகே சில்லரை காய்கறி மார்க்கெட்டை அதன் தலைவர் மனுவேல் ஜெயராஜ் துவக்கினார்.இந்த மார்க்கெட்டில் தினமும் இரவு 7:00 - நள்ளிரவு 12:00 மணி, அதிகாலை 4:00 - காலை 10:00 மணி வரை அனைத்து காய்கறிகளும் விற்கப்படும். மக்கள், வியாபாரிகள், ஓட்டல் நடத்துவோர் வாங்கி பயன் பெறலாம். இதனால், ஒருங்கிணைந்த மார்க்கெட்டில் கூட்டம் குறையும் என தலைவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலுசாமி, பாண்டி, ரமேஷ், வியாபாரிகள் பங்கேற்றனர்.