சின்னமனுார்: மும்பையில் கிராக்கியால் தேனிமாவட்ட நாழிப்பூவன் வாழைப்பழம் கிலோ ரூ. 40 முதல் 45 க்கும் விற்கப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் ஜி 9, செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன் போன்ற வாழை ரகங்கள் அதிக பரப்பில் சாகுபடியாகிறது. கேரளாவில் ஓணம், ரம்ஜான் பண்டிகை காலங்களில் நல்ல விலை கிடைக்கும். கொரோனா பரவல் காரணமாக விலையும், விற்பனையும் மந்தமாக
இருந்தது.
தற்போது அவற்றின் வரத்து 40 ல் இருந்து 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. விலையை பொறுத்தவரை ஜி 9 வாழைப்பழம் கிலோ ரூ. 9 முதல் 10 வரையிலும், செவ்வாழை ரூ. 20 முதல் 23 , நேந்திரன் ரூ. 16 முதல் 18 ம், நாழிப்பூவன் ரூ. 40 முதல் 45 க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் அதிக கிராக்கியால் இங்கிருந்து அனுப்பப்படுவதால் நாழிப்பூவன் விலை உச்சத்தில் உள்ளது.