நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் தேவை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2020
05:55

தேனி: தேனியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.



மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் 8 மாதங்களுக்கு பின் நேற்று 'ஜூம் ஆப்' மூலம் நடத்தப்பட்டது. 8 வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை வகித்தார்.

விவசாயிகள் பேசியதாவது:

பாண்டியன், மாவட்ட விவசாய சங்க தலைவர்: மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் இன்றி திறந்தவெளி கொள்முதல் செய்வதால் மழையால் மகசூல் பாதிக்கிறது.

ஈரமாவதால் எடைபோடமறுக்கின்றனர். 50 நிரந்தர கொள்முதல் நிலையம் அமைப்பதாக அரசு கூறியது. 2016-2017 ல் நிலவரி ரத்து செய்துள்ளது. கொரோனாவால் விவசாயிகள் பயிர்கடனை ரத்து செய்ய வேண்டும்.

கண்ணன், விவசாய சங்க செயலாளர்: நெல் கொள்முதல் நிலையங்களில் மூடைக்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கரும்பு நிலுவை தொகை வழங்க ஆலை நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். மலைமாடுகள் மேய்ச்சலுக்கு செல்வதில் வனத்துறை தொடர்ந்து இடையூறு செய்கின்றனர்.

சேதுராமன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்: நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. தவறுகள் நடைபெறாமல் தடுக்கப்படும். தற்போது 3 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெற்றிலைக்கு காப்பீடு

வெற்றிலை விவசாயிகள்: ஜெயமங்கலம், மேல்மங்கலம் பகுதியில் வெற்றிலை அதிகளவில் சாகுபடியாகிறது. இதற்கு பயிர்காப்பீடு,பயிர்க்கடன் கிடைப்பது இல்லை. மானியம் வழங்க வேண்டும்.

பாண்டி, தோட்டக்கலை துணை இயக்குனர்: சாகுபடி பரப்பளவு அதிகம் இருந்தால்தான் காப்பீடு செய்ய முடியும். மதிப்பு கூட்டிய பொருளாக மாற்ற தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் முயற்சிகள் நடக்கிறது.

சலிமா , கொடுவிலார்பட்டி: விலை கிடைக்காமல் வெண்டைக்காய், மல்லி தழை ஆற்றில் கொட்டுகின்றனர்.

தோட்டக்கலை துணை இயக்குனர்: விவசாயிகள் கொட்டவில்லை. முத்திய காய்களை வியாபாரிகள் கொட்டியுள்ளனர்.

அம்சராஜன், கோம்பை : தேவாரம்,கோம்பையில் மக்னா யானை பயிர்களை சேதப்படுத்தி 11 மனித உயிர்களை பலிவாங்கியுள்ளது.

அதனை பிடிக்க வேண்டும். இங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும். கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஷ்ணுராம் மேத்தி தொகுத்து வழங்கினார்.


 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X