தேனி: தேனி முன்னாள் எம்.எல்.ஏ., வும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான ஆர்.டி. கணேசன், தேனி வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜெயலட்சுமி தம்பதியினரின் மகள் திரிஷாவுக்கும் , ஆர். பாலமுருகன் -ஜனதா தம்பதி மகன் ஆர்.பி லிங்கேஷ் சிவாவிற்கும், நேற்று தேனி என்.ஆர்.டி., மஹாலில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் திருமணம் நடந்தது.
அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் முருக்கோடை ராமர், பொதுக்குழு உறுப்பினர் டி.டி.சிவக்குமார், மதுரை மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் எம்.எஸ். பாண்டியன், பி. ஜெயபிரதீப், நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் அன்னப்பிரகாஷ், கொத்தாளமுத்து, தர்மராஜ், செல்லமுத்து, லோகிராஜன், வரதராஜன், நிர்வாகிகள் வாழ்த்தினர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், தயாளன், மகாலிங்கம், சந்திரசேகரன், ரமேஷ்பாபு, பாண்டியன், இளங்கோவன், அனந்தப்பன், அரண்மனை சுப்பு, தொழிலதிபர்கள் முத்து கோவிந்தன், பாண்டியராஜன், ஈஸ்வரி முருகன், கவுமாரி சுரேஷ் கலந்து கொண்டனர். பழனிச்செட்டிபட்டி பேரூர் செயலாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கண்ணன், வெங்கடேஷன், பால்பாண்டி செய்தனர்.