கூடலுார்: லோயர்கேம்பில் இருந்து குமுளிக்கு செல்ல ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து குமுளி வரை செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் 6 கி.மீ., க்கு முன்னதாக உள்ள லோயர்கேம்ப் வரை
மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனால் லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 10 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் டிரிப் அடிக்கின்றன.
இதற்கான கட்டணம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு ஒருவருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. ஒரு ஆட்டோவில் குறைந்தது 8 பேரை ஏற்றிச் செல்கின்றனர்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பதைபோலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.