சிவகங்கை: சிவகங்கை செந்தமிழ்நகர் பஞ்சமுக ஆனந்த விநாயகர் கோயில் கும்பாபி ேஷகம் நடந்தது.
இக்கோயிலில் பூர்வாங்க பணிகள் நடந்து, நவ.,23 அன்று அனுக்கை விக்னேஸ்வர பூஜைகளுடன் கும்பாபி ேஷக விழா துவங்கியது. தொடர்ந்து நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நவ.,26 அன்று பிள்ளையார்பட்டி சிவாச்சாரியார் பிச்சை குருக்கள் கலச பூஜையை துவக்கி வைத்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, கோபூஜை, நான்காம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷகம் தொடங்கியது.
காலை 8:35 மணி முதல் 9:35 க்குள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. செந்தமிழ்நகர், புதுார் பகுதி பக்தர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சர்வசாதக பூஜையை கீழப்பூங்குடி கண்ணப்ப குருக்கள் செய்திருந்தார். கோயில் குருக்கள் மதன்குமார்சிவம் பூஜைகளை செய்தார். விழாக்குழு தலைவர் சூரியநாராயணன், நிர்வாகிகள் சோபி, சுந்தரம், ராமகிருஷ்ணன், மாரியப்பன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.