சிவகங்கை: நிவர் புயல் கரையை கடந்த நிலையில் நேற்று முன் தினம் இரவுமாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக காளையார்கோவில் பகுதியில் 137.2மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நிவர் புயலால் சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
புயல் கரையை கடக்கும் வரை மழை இல்லாமல் இருந்தது. விவசாயிகள் சிவகங்கைக்கு மழை இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.
நேற்று முன் தினம் இரவு மாவட்டம்
முழுவதும் பரவலாக மழை பெய்தது.
மழையளவு மி.மீ., ல்: சிவகங்கை 59.6, மானாமதுரை 21,திருப்புவனம் 86.4, தேவகோட்டை 74.2, காரைக்குடி 49,திருப்புத்துார் 39,காளையார்கோவில் 137.2, சிங்கம்புணரி 65.4. இளையான்குடியில் மட்டும் மழை பதிவாகவில்லை. அதிகபட்சமாக காளையார்கோவிலில் 137.2 பதிவாகியது.
இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் பல கண்மாய் நிறைந்து
மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.