ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம், நிவர் புயல் எதிரொலியாக, பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி பதிவான மழை விபரம் (மி.மீ.,ல்): பவானி, 6.6, கவுந்தப்பாடி, 6.2, வரட்டுப்பள்ளம், 5.2, ஈரோடு, 3, பெருந்துறை, மொடக்குறிச்சி, 3, சென்னிமலை, 2, அம்மாபேட்டை, 1.6 மி.மீ., மழை பதிவானது. அதேசமயம் மாநகரில் நேற்று வெயில் வாட்டியது.