சேலம்: சேலம், பள்ளப்பட்டி, துரைசாமி நகரை சேர்ந்தவர் விஜி, 29. இவர், சாமிநாதபுரம் பிரதான சாலையில், சாக்கு தைக்கும் கடை நடத்துகிறார். இவரது கடையை ஒட்டி, தனியார், 'பார்சல்' நிறுவனம் செயல்படுகிறது. அந்நிறுவனத்துக்கு வரும் வாகனங்கள், விஜியின் கடைக்கு முன்புறம் நிறுத்தப்படுவதால், அதன் ஊழியர்களுக்கும், விஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு, வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், அந்நிறுவன ஊழியர்கள் விஜியை, பீர் பாட்டிலால் தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து, தாக்குதலில் ஈடுபட்ட, பள்ளப்பட்டி, ராமலிங்க நகரை சேர்ந்த சிவா, 27, தாதகாப்பட்டி கோபிநாத், 24, விக்னேஷ், 24, மல்லூர் மணிவண்ணன், 27, ஆகியோரை கைது செய்தனர்.