மகுடஞ்சாவடி: சித்தர்கோவில் - மாட்டையாம்பட்டி பிரதான சாலை, சித்தர்கோவில் பகுதியிலிருந்து, கே.கே.நகர் வரை, 2 கி.மீ., தூரம், தெருவிளக்கு போதிய எண்ணிக்கையில் இல்லை. இதனால், வேலைக்கு சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பும் பெண்கள், 'குடி'மகன்கள் தொல்லைக்கு ஆளாகின்றனர். மேலும், தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் கடிக்கு ஆளாகின்றனர். திருட்டு பயமும் உள்ளது. இதுதவிர, அச்சாலை வழியாக நடந்து செல்லும்போது, விபத்து அபாயமும் நிலவுகிறது. இதனால், போதிய எண்ணிக்கையில், தெருவிளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.