கெலவரப்பள்ளி அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் திறப்பு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கெலவரப்பள்ளி அணையிலிருந்து 400 கன அடி தண்ணீர் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2020
10:10

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று நீர்வரத்து அதிகரித்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியில், மழை பெய்ததால், கடந்த, 25 முதல், நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த, 25ல், 240 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் காலை, 328 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், 240 கன அடியும், வலது, இடது வாய்க்காலில், 88 கன அடியும் என மொத்தம், 328 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 488 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.02 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், 400 கன அடியும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என மொத்தம், 488 கன அடி தண்ணீரும், அணையிலிருந்து வெளியேற்றப்பட்டது.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X