மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், நடப்பாண்டில், நான்காம் முறை, 'சதம்' அடித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த பருவமழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 6,512 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 8,111 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, குடிநீர் தேவைக்கு, வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து உயர்வால், நேற்று முன்தினம், 99.32 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நடப்பாண்டில், நான்காம் முறை, நேற்று மதியம், 12:05 மணிக்கு, 100 அடியாக உயர்ந்தது. முன்னதாக, கடந்த செப்., 25ல், அணை நீர்மட்டம், நடப்பாண்டில் முதல்முறை நிரம்பியது. பின், அக்., 13ல், இரண்டாம் முறை, அதே மாதம், 24ல், மூன்றாம் முறை நிரம்பியது. நேற்று, நீர்மட்டம், 100 அடி, நீர் இருப்பு, 54.65 அடியாக இருந்தது.