நாமக்கல்: மாவட்டத்தில், முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில், முக கவசம் அணியாத, 189 நபர்களை கண்டறிந்து, வழக்குகள் பதிந்து, 37 ஆயிரத்து, 800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 'மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோயை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் தவறாமல் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, எஸ்.பி., சக்தி கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.