நாமக்கல்: 'வரும் டிச., 31க்குள் அனைத்து வரியினங்களையும் செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நாமக்கல் நகராட்சிக்கு 2020-21ம் நிதியாண்டுக்கான செலுத்த வேண்டிய சொத்து, காலிமனை, தொழில் வரிகள், குடிநீர், தொழில் உரிமம் மற்றும் பாதாள சாக்கடை மாதாந்திர கட்டண நிலுவை மற்றும் நடப்பு ஆகியவற்றை, வரும், டிச., 31க்குள் உடனடியாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கைகள் போன்ற சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கணினி வசூல் மையம், மோகனூர் சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் செயல்படும் கணினி வசூல் மையம் ஆகிய இரு மையங்களும், பொதுமக்கள் வசதிக்காக, சனிக்கிழமை உட்பட காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை செயல்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.