பள்ளிபாளையம்: கீழ்காலனியில், சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, குடிமகன்களால் வீணாகிறது. பள்ளிபாளையம் அடுத்த, கீழ்காலனி பகுதியில் சாலையின் மையப்பகுதியில் குறிப்பிட்ட பகுதிகளை சுற்றிலும், பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு, உள்ளே புல்தரை, பூச்செடிகள், மரக்கன்றுகள் வைத்து பூங்கா அமைத்து பராமரிக்கப்படுகிறது. இங்கு மாலை நேரத்தில் குடிமகன் சிலர் மது அருந்துகின்றனர். அவர்களை பார்த்து மற்றவர்களும், இதை பின்பற்றி தற்போது திறந்தவெளி மது அருந்தும் பாராக மாறிவிட்டது. மது பாட்டில், தண்ணீர் பாட்டில் போன்றவை பூங்காவிலேயே வீசி விடுகின்றனர். பூங்காவின் அடையாளமே மாறிவிட்டது. மேலும், செடிகளும், பாதுகாப்பு வளையும் சேதமடைந்து வருகிறது. சாலையில் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.