குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, விபத்து பள்ளத்தை சரி செய்ய, கோரிக்கை எழுந்துள்ளது. குமாரபாளையம் அடுத்த, சேலம்- கோவை புறவழிச்சாலை காவிரி பாலத்தில் இருந்து குமாரபாளையம் வரும் சர்வீஸ் சாலையில், நுழைவுப்பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இதில் மழைநீர் தேங்கியுள்ளது. பவானியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் குமாரபாபாளையம் வர வேண்டும். இதில், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் இறங்கி,நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், இந்த பள்ளத்தை ஜல்லி மற்றும் தார் கொண்டு அடைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.