கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், தலைவர் சுப்ரமணியன் தலைமையில், தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய, மாநில அரசுகள் பறித்த ஊழியர்களின் உரிமைகளை மீட்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுலவலர்கள் சங்க பொதுச்செயலாளர் பொன் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.