குளித்தலை: குளித்தலை யூனியன் குழு சாதாரண கூட்டத்திலிருந்து, தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குளித்தலை யூனியன் குழு சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் விஜய விநாயகம் தலைமை வகித்தார். கூட்டத்தில், 25 பொருள் அடங்கிய தீர்மானங்களை மேலாளர் ரவி வாசிக்க தொடங்கினார். அப்போது, தி.மு.க., கவுன்சிலர்கள் எழுந்து, சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, யூனியன் குழு தலைவர் விஜய விநாயகம் பதிலளித்தார். பிறகு, குழு தலைவர் சாந்தா ஷீலா தலைமையிலான, தி.முக.., கவுன்சிலர்கள, யூனியன் குழு தலைவர், கமிஷனரை முற்றுகையிட்டு, 10 தீர்மானங்களுக்கு யூனியன் குழு தலைவர் அளித்த பதில் திருப்தியளிக்காததாக கூறி, வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, 25 தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக யூனியன் குழு தலைவர் அறிவித்தார். துணைத் தலைவர் இளங்கோவன், கமிஷனர்கள் விஜயகுமார். ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.