கரூர்: தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின், பிறந்த நாள் விழா, கரூர் தெற்கு நகர பொறுப்பாளர் சுப்ரமணி தலைமையில், தெரசா கார்னர், காந்தி கிராமம் ஆகிய இடங்களில் நடந்தது. அதில், தி.மு.க., கொடியேற்றி, பொதுமக் களுக்கு தென்னங்கன்றுகளும், மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகையையும் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி வழங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.