கரூர்: கரூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட, இரண்டு பேருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கரூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கரூர் நகரில், கடந்த, 2015ல் நான்கு இடங்களிலும், வெங்கமேடு பகுதியில், ஒரு இடத்திலும் பைக்குகள் திருடு போயின. இதையடுத்து, கரூர் டவுன் தனிப்படை போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்போது, திருப்பூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், 40, சசிகுமார், 44, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, கரூர் ஜே.எம்.,-1ல் நடந்து வந்தது. நேற்று, ஜெயராஜ், சசிகுமார் ஆகியோருக்கு தலா, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.