குளித்தலை: பூலாம்பட்டியில், பணம் வைத்து சூதாடிய இருவரை, போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, பூலாம்பட்டியில் முட்புதரில் பணம் வைத்து சூதாடுவதாக, லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியளவில் அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பூலாம்பட்டி கோபால், 34, பஞ்சப்பட்டி செல்வகுமார், 30, சேங்கல் பாலசுப்ரமணிஆகியோரை சுற்றி வளைத்தனர் இதில் கோபால், செல்வகுமார் கைது செய்யப்பட்டனர். பாலசுப்ரமணி தப்பி ஓடிவிட்டார். அவர்களிடமிருந்து, 10 ஆயிரத்து, 460 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.