குளித்தலை: திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றில், மண்பானையில் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., திம்மாச்சிபுரத்தில் காவிரி ஆறு செல்கிறது. நேற்று காலை, அங்கு மக்கள் குளிக்கும் போது, படித்துறையில் ஒதுங்கிய நிலையில் மண் பானை இருந்தது. அதில், பிறந்து, 10 நாட்களே ஆன, ஆண் சிசுவின் சடலம் இருந்தது. பானையில் சிசுவுக்கான உடை இருந்தது. கே.பேட்டை வி.ஏ.ஓ., கணேசனிடம் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர், வி.ஏ.ஓ., கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்