தான்தோன்றிமலை: கரூர் அருகே புலியூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நிதியின் கீழ் மயானம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மயானத்துக்கு செல்லும் வழியில் முட்புதர் முளைத்து, நுழைவுவாயிலை அடைத்துள்ளன. இதனால், இறந்தவர்களின் உடல்களை எளிதாக எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நுழைவு வாயிலை சுற்றி முட்புதர்களில், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. இரவு நேரத்தில் மயானத்துக்குள், சடங்குகளுக்காக செல்லும் ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.