கரூர்: கரூர்- திருச்சி சாலையில் தனியார் சிமென்ட் ஆலை அருகில், போக்குவரத்தை சீர் செய்ய தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், பல மாதங்களாக சிக்னல் சரிவர இயங்குவதில்லை. மேலும், சுற்றிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. கரூரில் இருந்து திருச்சிக்கு நாள் தோறும் பஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பிரிவு சாலையில் வாகனங்கள் செல்கின்றன. இதனால், புலியூர் தனியார் சிமென்ட் ஆலை அருகில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.